புதுச்சேரி காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து 11 பேர் விருப்ப மனு அளித்தனர்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்த 11 பேரிடம் இன்று நேர்காணல் நடைபெற்றது. இதில், தொகுதி சம்பந்தமான கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் இடைத்தேர்தல் தொகுதி செலவு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் நாளை டெல்லி தலைமையை சந்தித்து இந்த நேர்காணல் விவரங்களை அளிக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் பார்க்க : புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் ஆறு பேர் விருப்பமனு தாக்கல்