மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு மக்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க பல கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளன. ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பற்றி விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மணிஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைவது குறித்து விவாதிக்க காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இதேபோல் புதிய கல்வி கொள்கையின் வரைவை தயார் செய்ய கால நீட்டிப்பு வேண்டும் என்பதை விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா ஒத்துவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். பாகிஸ்தானில் இந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றம் செய்வது, இந்து பெண்களின் மேல் கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள் ஆகியவை குறித்து விவாதிக்க பாஜக மாநிலங்களவை உறுப்பினர் லால் மீனா மாநிலங்களவையில் ஒத்துவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.