ETV Bharat / bharat

காங்கிரஸ் நிறுவன தினத்தில் ராகுல் தலைமையில் நாடு தழுவிய பேரணி - காங்கிரஸ் நிறுவன தினம்

டெல்லி: காங்கிரஸ் நிறுவன தினத்தில் நாடு தழுவிய பேரணி நடத்தப்பட உள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Cong to take out marches across country on its foundation day

author img

By

Published : Dec 27, 2019, 11:51 PM IST

1885 டிசம்பர் மாதம் 28ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்தாண்டு காங்கிரஸ் நிறுவன தினத்தை அக்கட்சி மிகப்பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டுள்ளது. அதன்படி நாடு முழுக்க பேரணி நடத்தப்பட உள்ளது.

இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்திய நாட்டை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் இந்தப் பேரணி நடக்கவுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் வெவ்வேறு இடங்களில் இந்தப் பேரணியை நடத்தவுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுக்க எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்திவருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நாளை (டிச28) மிகப்பெரிய பேரணியை நடத்தவுள்ளது.

இது அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெறும் காங்கிரஸ் பேரணியில் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாட்டின் குரலை அடக்க முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.