ETV Bharat / bharat

'ஜனநாயகத்திற்காக குரல் கொடுங்கள்' டிஜிட்டல் பரப்புரை மேற்கொள்ளும் காங்கிரஸ்! - ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்

ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ் கட்சி சார்பாக 'ஜனநாயகத்திற்காக குரல் கொடுங்கள்' என்று இணையதளங்களில் பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது.

cong-to-run-nationwide-digital-campaign-speak-up-for-democracy-on-sunday

author img

By

Published : Jul 26, 2020, 10:48 AM IST

காங்கிரஸ் கட்சி, ஆட்சி செய்த மாநிலங்களில் தொடர்ந்து அக்கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதும், அதையடுத்து பாஜக ஆட்சிக்கு வருவதும் தொடர்கதையாகி வருகிறது. கர்நாடகாவைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், ராஜஸ்தானில் அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அம்மாநில அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. இதனிடையே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தீவிரமாக முயன்று வரும் நிலையில், அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்காமல், சட்டப்பேரவையைக் கூட்ட எந்தக் காரணமும் இல்லை என கூறினார். இதனால் ஆளுநர் மாளிகை முன்பாக அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க அரசமைப்பை தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வரும் பாஜகவைக் கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளுக்கு முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் இணையதளங்களில் 'ஜனநாயகத்திற்காக குரல் கொடுங்கள்' என்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும்; நீதிமன்ற உத்தரவுக்குப்பின் முதலமைச்சர் கெலாட் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.