தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மக்களை சந்திக்காமல் கடந்த ஆறு ஆண்டுகளாக குவாரன்டைனில் இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சீதக்கா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீதக்கா, "நம் முதலமைச்சர் கடந்த ஆறு ஆண்டுகளாக குவாரன்டைனில்தான் உள்ளார். ஒன்று விவசாயப் பண்ணையில் இருக்கிறார் அல்லது பிரகதி பவனில் (முதலமைச்சர் அலுவலகம்) நேரத்தை செலவிடுகிறார்.
ஆனால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் மக்களை, அவரோ, அவரது கட்சியினரோ சந்திப்பதில்லை. எந்த பிரச்னையையும் அவர் தீர்ப்பதாகத் தெரியவில்லை. அவருடைய கவனம் எல்லாம் எதிர் கட்சியான காங்கிரஸ் மீதே உள்ளது.
மக்கள் பிரச்னைகளை அவரிடம் எடுத்துக் கூறும் எங்களை, வீட்டுச் சிறையில் அடைக்கிறார். நான் அவரிடம் இதை கூறிக்கொள்கிறேன், எங்கள்மீது செல்லும் கவனத்தை, மக்கள்மீதும் அவர்களது பிரச்னைகளின்மீதும் செலுத்துங்கள்.
கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. மருத்துவமனைகளில் சரியான வசதிகள் அளிக்கப்படுதில்லை. மக்களுக்கு சிகிச்சை தர போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லை. இவை அனைத்தையும் கவனியுங்கள்" என காட்டமாத் தெரிவித்னார்.
இதையும் படிங்க : ஜியோ நிறுவனத்தில் பிரபல அமெரிக்க நிறுவனம் 4 ஆயிரம் கோடி முதலீடு!