கரோனா பாதிப்பு தொடர்பாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஆஷிஷ் ஜாவுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரத்யேக நேர்காணல் நடத்தினார். இதில் கரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம், நோய்த் தடுப்பு முறை, தடுப்பூசி ஆகியவை தொடர்பாக பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
அதில் பேசியதாவது, கரோனா பாதிப்பை தடுக்க அனைத்து மாநிலங்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். இந்தியாவில் பி.சி.ஜி. தடுப்பூசி முறை சரியாக அமல்படுத்தியுள்ளோம். அதன் தாக்கம் இந்தியாவில் நோய்த் தொற்று பரவலை தடுப்பதை முக்கிய பங்காற்றுகிறது எனக் கூறலாம். இருப்பினும் இந்த கோணத்தை இந்தியா முழுமையாக நம்பி அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.
அடுத்தாண்டுக்குள் கரோனாவுக்கான தடுப்பூசி கண்டறியப்படும் என நம்பப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளை மேற்கொண்டுவருகின்றன. எனவே, அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என நம்புவதாக ஆஷிஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ட்விட்டர்