ETV Bharat / bharat

பிகாரில் 45 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு!

author img

By

Published : Aug 1, 2020, 7:36 PM IST

பாட்னா: பிகார் மாநிலத்தில் சுமார் 45 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.

flood
flood

அஸ்ஸாம், பிகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களின் எந்தப் பகுதியை பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிவழிகின்றன. இதனால் பெரும்பாலான பகுதிகளிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை வெள்ளத்தால் 11 பேர் உயிரிழந்ததாக அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை கூறியுள்ளது. இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மொத்தம் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், சுமார் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 3.5 லட்சம் மக்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்களில் 26 ஆயிரத்து 732 பேரை நிவாரண முகாம்களில் தங்கவைத்துள்ளனர். மாநிலம் முழுவதும் செயல்படும் 1,193 சமுதாய உணவுக் கூடங்களின் மூலம் 8 லட்சம் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுவருகிறது. மாநிலத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பிகார் வெள்ளம்: கர்ப்பிணிக்கு மீட்பு படையினர் படகில் குழந்தை பிறந்தது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.