ETV Bharat / bharat

கோமாவில் பிரணாப் முகர்ஜி -ராணுவ மருத்துவமனை!

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என அவர் சிகிச்சை பெற்றுவரும் ராணுவ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோமாவில் பிரணாப் முகர்ஜி -ராணுவ மருத்துவமனை!
கோமாவில் பிரணாப் முகர்ஜி -ராணுவ மருத்துவமனை!
author img

By

Published : Aug 13, 2020, 10:17 AM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பிரணாப் முகர்ஜிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை, “முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்றுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக் கிடமாகவே உள்ளது. தற்போது வெண்டிலேட்டர் உதவியால் பிரணாப்பின் முக்கிய உறுப்புகள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன” எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரணாப் முகர்ஜி உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவிய நிலையில், தனது தந்தை உயிருடன் இருப்பதாக பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...'என் தந்தை நலமுடன் இருக்கிறார், வதந்திகளை பரப்ப வேண்டாம்' -பிரணாப் முகர்ஜி மகன் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.