நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸை தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதனிடையே, அஸ்ஸாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் சமீப காலமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், "கம்ரூப் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க ஜூன் 28ஆம் தேதி நள்ளிரவு முதல் 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அஸ்ஸாம் முழுவதும் நகர்புறங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை இரு நாள்களும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்" எனத் தெரிவித்தார்.