சீன அதிபர் ஜி ஜின்பிங் மீது பிகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சுதீர் குமார் ஓஜா மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், கரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவின் சதியே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மனுவில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் ஆகியோர் சதித் திட்டம் தீட்டி இந்தியாவில் கரோனா வைரஸை பரப்பிவிட்டனர் எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த மனு ஏப்ரல் 11ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. இந்தியாவில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு அறிகுறிகள் தென்படுகின்றன. அதில் 17 பேர் வெளிநாட்டினர் ஆவார்கள்.
சீனாவின் வூகான் மாகாணத்தில் முதலில் அறியப்பட்ட கரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்று உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் கரோனாவால் 350 பேர் பாதிப்பு!