கடந்த 2019 அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து 2023 மார்ச் 31ஆம் தேதிவரையிலான உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 15% வரி மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உலகளாவிய அச்சுறுத்தலான கோவிட் -19 பரவல் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட உற்பத்தி வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு இன்னும் ஓராண்டிற்கு 15% வரி பிடித்தம் செய்வது நீட்டிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய வரி குறைப்பால், உற்பத்தி நிறுவனங்களின் வரிச்சுமை வெகுவாக குறைந்துள்ளதாக அறிய முடிகிறது. இதன் மூலம், உற்பத்தி நிறுவனங்களின் மீதான கூடுதல் வரி மற்றும் கல்வி வரியோடு சேர்ந்து மொத்தமாக 17.16% வரி மட்டுமே வசூலிக்கப்படும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த வரி சலுகையானது உற்பத்தியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் உதவும் என மத்திய அரசு உறுதியாக நம்புகிறது.
உலகளவில் மிக குறைந்த வரிவிதிப்பை கைக்கொள்வதன் மூலமாக உற்பத்தி நிறுவன முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.