உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் படான் நகரம் அமைந்துள்ளது. இங்கு கோவிலும், மசூதியும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
அவற்றின் ஜெபத்தை (மந்திரம்- பாங்கு) ஒரே நேரத்தில் கூட கேட்கலாம். இரு சமூக மக்களும் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லாமல் இந்த பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர்.
இந்நகரில் மக்கள் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவதோடு, பரஸ்பர சுக வாழ்வையும் தொடர்கின்றனர். இன்று அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அயோத்தியில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு முற்றிலும் எதிராக படானில் நிலவரம் உள்ளது. இங்குள்ள சமூகம் ஒருவருக்கொருவர் தங்கள் மசூதி மற்றும் கோயிலில் ஒற்றுமையைக் கொண்டுள்ளனர்.
நகரின் மையத்தில் ஒரு அனுமன் கோயிலும், ஹஸ்ரத் மீரா ஜி சஹாப் மசூதியும் ஒரே சுவரைப் பகிர்ந்துகொண்டு ஒற்றுமையுடன் பிரார்த்தனை செய்கின்றன. மந்திரங்கள் மற்றும் அஸான்களின் (பாங்கு) ஒலியைக் கூட ஒரே நேரத்தில் கேட்க முடியுகின்றது.
இப்பகுதியில் வாழும் மக்கள் எப்போதும் மற்ற மதங்களின் மீதுள்ள அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் இரு ஆலயங்களிலும் வணக்கம் செலுத்துகிறார்கள்.
இதுபற்றி உள்ளுர்வாசி அசோக் ராணா என்பவர் ஈ.டி.வி பாரத் உடன் பேசும் போது, "இந்த இடம் இந்து-முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. உள்ளூர்வாசிகள் யாரும் இதற்கு எந்த ஆட்சேபனையும் செய்வதில்லை.
தேவைப்படும் நேரத்தில் நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கிறோம். வரவிருக்கும் காலங்களில் இந்தியாவின் பாரம்பரியத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக இது திகழும்” என்றார்.
மசூதியைச் சேர்ந்த எம்.டி.பைசல் கத்ரி கூறுகையில், “இந்த மசூதி பல நூற்றாண்டுகள் பழமையானது. இந்துக்கள்- முஸ்லிம்கள் இடையேயான இந்த தனித்துவமான பிணைப்பு, பல ஆண்டுகளாக இங்கு பின்பற்றப்பட்டுகிறது.
அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்திற்கு இதனை முன்மாதிரியாக வைப்போம்." என்றார்.
படானில் காணப்படும் கோயில் மற்றும் மசூதி ஒற்றுமை, சகோதரத்துவத்தின் அடையாளமாகக் காணப்படுகிறது. அனைத்து மதங்களையும் நம்பிக்கையையும் கொண்ட மக்கள் வாழும் இந்நாட்டின் நல்லிணக்கத்துக்கு படான் ஒரு முன்மாதிரி.
இதையும் படிங்க: சமூக அமைதிக்குத் துணை நிற்கும் இஸ்லாமிய அமைப்புகள்!