கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் விதமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அமைச்சர்கள், அலுவலர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்துவருகின்றனர். தங்களின் வேலைகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாகவே அவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் நேற்றிலிருந்து அலுவலகத்திற்கு சென்று பணிபுரிந்துவருகின்றனர். இதுகுறித்து மத்திய இணையமைச்சர் சோம் பிரகாஷ் கூறுகையில், "வீட்டிலிருந்தபடியே கோப்புகள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டன. அமைச்சரவை அலுவலர்களிடம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினோம்.
பெருந்தொற்றை வீழ்த்துவதே எங்கள் குறிக்கோள். மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் அரசு உறுதியாக உள்ளது. பொருள்களை எடுத்துச் செல்ல போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்" என்றார்.
இதையும் படிங்க: வீட்டிற்குள் மனிதர்கள்: விடுதலையாகும் விலங்குகள்
!