ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி: மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சர்வதேச சமூகத்துடன் இந்தியா பணியாற்றும்!

author img

By

Published : Aug 1, 2020, 3:51 AM IST

Updated : Aug 1, 2020, 8:26 AM IST

டெல்லி: கரோனா தடுப்பூசியை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உலகளாவிய அறிவியல் சமூகத்துடன் இணைந்து பணியாற்றிவருவதாக ஐசிஎம்ஆர் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.

கோவிட்-19 தடுப்பூசி : விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சர்வதேச சமூகத்துடன் இந்தியா பணியாற்றும்!

கரோனா வைரசுக்கு எதிரான ஐசிஎம்ஆர் தடுப்பூசி உருவாக்கம் மற்றும் நெறிமுறைகள் குறித்த முன்னணி தடுப்பூசி ஆராய்ச்சியாளர்களின் காணொலி கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் தடுப்பூசி வளர்ச்சியில் உள்ள சவால்கள், வாய்ப்புகள் குறித்து விவாதிக்க 250க்கும் மேற்பட்ட முன்னணி அறிவியலாளர்கள், பொதுச் சுகாதாரத் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா, "உலகளாவிய அசுச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. அந்தத் தடுப்பூசி சரியான நேரத்தில் உலகளவில் கிடைப்பதை உறுதிசெய்வதில் சர்வதேச அறிவியல் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சராசரியான காலங்களைக் காட்டிலும் இந்தக் காலக்கட்டம் மிகவும் சவாலானது. அத்தகைய சூழலில், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியின் வளர்ச்சியை உறுதிசெய்வது, அதன் வளர்ச்சி நுட்பங்களுக்கான வெவ்வேறு அணுகுமுறைகளின் சிறப்பைப் புரிந்துகொள்வது, மாறுபட்ட சரிபார்ப்பு அணுகுமுறைகள், அவை அனைத்தையும் சுற்றியுள்ள நெறிமுறைக் கருத்தாய்வு ஆகியவற்றை உள்ளடக்கியவை எவ்வளவு முக்கியமானது என நாங்கள் அறிவோம்.

தடுப்பூசி கிடைக்கும்போது, ​​இந்தியாவின் தனியார் தடுப்பூசி உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கும் என்று தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபௌசி கூறியிருப்பது இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அவசரமாகத் தேவைப்படுகிறது. இதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறனை மேம்படுத்துவற்கான உலகளாவிய முயற்சிகளில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

அனைத்து தடுப்பூசி சோதனைகளும் விரைவான கண்காணிப்பு முறைகளை ஆராயும்போது நோயாளியின் பாதுகாப்பு மற்றும் நெறிமுறை விதிமுறைகளுக்கான மிக உயர்ந்த தரத்திற்கிணங்க வேண்டும் என்று உலகளாவிய வல்லுநர்கள் ஒப்புக்கொண்டனர் என சுகாதார வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

உலகளாவிய பொதுநலனுக்கான உருவாக்கப்படும் தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோக தன்மை ஆகியவற்றில் உலகளாவிய தரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Last Updated : Aug 1, 2020, 8:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.