இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "புதுச்சேரி மாநிலத்தில் தினமும் 30 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதனால் அருகில் உள்ள மாநிலமும், மாவட்டங்களும் முழு ஊரடங்கை மேற்கொண்டுள்ளன. அந்த முழு ஊரடங்கு திரும்பப் பெறும்போது, கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே தயவுசெய்து கூட்டம் கூடுவதைத் தவிர்த்தல், முகக்கவசம் அணிதல், சுகாதாரத் துறை அறிவுரைப்படி நடத்தல், தகுந்த இடைவெளியுடன் சென்றுவருதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைளை புதுச்சேரி மக்கள் பின்பற்ற வேண்டும். நம்மை நாம் பாதுகாப்பதன் மூலமாக மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். வருமுன் காப்பதே சிறந்தது. அதன்படி நம்முடைய ஒருங்கிணைந்த முயற்சிகளால் மட்டுமே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இதுதான் என்னுடைய வேண்டுகோள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் தீபாவளிக்கு இலவச துணியா பணமா? மத்திய அரசுக்கு கோப்புகளை அனுப்பிய கிரண்பேடி