ETV Bharat / bharat

பட்டுடன் கலந்த பருத்தித் துணி சிறந்த முகக் கவசமாக செயல்படும் - ஆராய்ச்சி முடிவுகள்

author img

By

Published : Apr 26, 2020, 7:39 PM IST

இயற்கையாகக் கிடைக்கும் பட்டு அல்லது ஷிஃபானுடன் கலந்த பருத்தித் துணி காற்றிலுள்ள திரவத் துகள்களை (ஏரோ சால்) திறம்பட வடிகட்டி, கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க உதவும் என சமீபத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

கரோனா முகக் கவசங்கள் குறித்த ஆராய்ச்சி
கரோனா முகக் கவசங்கள் குறித்த ஆராய்ச்சி

கரோனா வைரஸானது பொதுவாக பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மல், பேச்சு, சுவாசத் துளிகள் ஆகியவற்றின் மூலம் பரவுவதாகக் கருதப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், ACS நானோ இதழில் இதுகுறித்து ஒரு அமெரிக்கக் குழுவின் ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கரோனா முகக் கவசங்கள் குறித்த ஆராய்ச்சி
கரோனா முகக் கவசங்கள் குறித்த ஆராய்ச்சி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றிருந்த, அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழகத்தின் இந்த ஆராய்ச்சிக் குழு, கரோனா வைரஸைத் தடுக்கும் துணிகளின் திறன் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இதன்படி, இயற்கையாகக் கிடைக்கும் பட்டு அல்லது ஷிஃபானுடன் கலந்த பருத்தித் துணி காற்றிலுள்ள திரவத் துகள்களை (ஏரோ சால்), திறம்பட வடிகட்டி கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க உதவுவது தெரிய வந்துள்ளது.

இவை N95 மாஸ்க்குகளின் திறனை ஒத்து செயல்படுவதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: 'கரோனா கண்டறிதல் சோதனையை அதிகரிக்க பிரதமர் வேகமாகச் செயல்பட வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.