ஜம்மு காஷ்மீரின் ஹண்ட்வாரா பகுதியில் இருக்கும் 21 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் கட்டளை அதிகாரியான கர்னல் அசுதோஷ் சர்மா, பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது வீர மரணம் அடைந்தார்
கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் கட்டளை அலுவலராக இருக்கும் ராணுவ வீரர் ஒருவர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழப்பது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் கர்னல் எம்.என். ராய் உயிரிழந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் கர்னல் சந்தோஷ் மகாதிக் என்பவரும் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார்.
கர்னல் அசுதோஷ் சர்மா துணிச்சலாக செயல்பட்டதற்காக இரண்டு முறை சேனா விருதைப் பெற்றுள்ளார். வெடிகுண்டுகளை மறைத்துப் பாதுகாப்பு படையினரை நோக்கி வந்த பயங்கரவாதி ஒருவரைச் சுட்டுக் கொன்றதற்காக முதல் கட்டளை அலுவலராக இருந்தபோது கர்னல் அசுதோஷ் சர்மா சேனா விருதைப் பெற்றிருந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் ஹேண்ட்வாரா பகுதியில் நடந்துவரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் மேஜர் அனுஜ் சூத், நாயக் ராஜேஷ், லான்ஸ் நாயக் தினேஷ் ஆகியோரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: டெல்லி சிஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு சீல் வைப்பு!