கர்நாடகா மாநிலம் முருலியா கிராமத்தைச் சேர்ந்த விதலா கௌடா, மங்களூரு புறநகர் பகுதியில் சூரத்கல்லில் வசிக்கும் அனுஷ் ஆகிய இருவரும் நாள் ஒன்றுக்கு 60 முதல் 80 தேங்காய்களைப் பறித்து எடுத்து ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இவர்கள் தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களைப் பறிக்க பாரம்பரிய பாணியைப் பின்பற்றாமல் தென்னை மரம் ஏறும் கருவியின் உதவியுடன் மரத்தில் ஏறுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் ஒரு நாளைக்கு 60 முதல் 80 மரங்களை ஏறி ரொம்பவும் மெனக்கெடாமல் தேங்காய் பறிக்கின்றனர்.
இதற்காக மங்களூரில் உள்ள கிருஷி விஜயன் கேந்திரா (கே.வி.கே) தென்னை மரம் ஏறும் பயிற்சியைப் பெற்றுள்ளனர். இது தான் இவர்களது மரம் ஏறும் பாணியை மாற்றியது. இந்த பயிற்சி மொத்தமாக ஆறு நாள்கள் நடைபெற்றன. இதில் பங்குபெறுபவர்கள் 7ஆவது கிரேடில் தேர்ச்சி பெற வேண்டும். அவர்களின் வயது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் போன்ற விதிகள் இருந்தன. ஆனால் வித்தல கௌடா பயிற்சிப் பட்டறைக்கு விண்ணப்பித்தபோது அவருக்கு 45 வயது. இதனால் அவரால் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள முடியவில்லை.
இருப்பினும் கௌவுடா தான் ஒரு விவசாயி என்றும் தன்னிறைவான வாழ்க்கைக்கு இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவதாகவும் கேவி மையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை பரிசீலித்த மையம் அவரை சிறப்பு பங்கேற்பாளராக ஏற்றுக் கொண்டது. ஏற்கனவே இருவருக்கும் தென்னை மரங்கள் ஏறுவதில் அனுபவம் இருந்ததால் எழுத்து மற்றும் நடைமுறை தேர்வுகளில் எளிதில் தேர்ச்சி பெற்றனர்.
இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட பிறகு அனிஷும், கௌடாவும் தென்னந்தோப்பில் பணிபுரிய தொடர்ச்சியாக அழைக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் 100 முதல் 125 தோட்ட உரிமையாளர்கள் தேங்காய் பறிக்க இரண்டு பேரையும் அழைக்கின்றனர். இவர்களுக்கு ஒரு தேங்காய் மரத்தில் ஏற 30 முதல் 35 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக அனிஷ் கூறுகையில், ”நான் ஏற்கனவே 20 முதல் 25 தோப்புகளில் வேலை செய்து வருகிறேன். எனக்கு உதவி தேவைப்பட்டால் அதிகமானவர்களை அழைத்துச் செல்வேன். கே.வி.கே.யில் பயிற்சி பெற்றதிலிருந்து எனது வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் அடைந்துள்ளது” என்றார்.
வேலையில்லாத இளைஞர்கள் இது போன்ற வேலை வாய்ப்புகளையும் கௌரவம் பார்க்காமல் செய்தால் அவர்களின் வாழ்க்கைத்தரமும் உயரும்.
இதையும் படிங்க:யூ டியூப் சேனலில் பல கோடி சம்பாதிக்கும் 6 வயது சிறுமி!