கோக் நிறுவனம் இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பின்பு மீண்டும் நுழைந்தது. அந்நிறுவனம், விஐஓ பிராண்டை 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களை சந்தைப்படுத்தியது.
தற்போது, அந்த பிராண்டின் கீழ் மசாலா மோரை அறிமுகப்படுத்தியுள்ளது. பிராந்திய, உள்ளூர்மயமாக்கப்பட்ட பானங்களை உருவாக்குவதன் மூலம் தங்களுடைய சந்தையை இன்னும் விரிவுபடுத்த முடியும் என்று அந்நிறுவனம் கருதுகிறது.
இதுகுறித்து கோக் இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் தொழில்நுட்ப மற்றும் விநியோகத்தின் துணைத் தலைவர் சுனில் குலாட்டி பேசுகையில், இந்தியாவில் உள்ளூர்மயமாக்கப்பட்ட பானங்களை நுகர்வோருக்கு கிடைக்கச் செய்வதன் மூலம் உள்ளூர் அளவிலான நுகர்வோர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம்" என்றார்.
இந்தியாவில் வளர்ந்துவரும் மோர் வகைகள் குறித்துப் பேசிய அந்நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவிற்கான சந்தைப்படுத்துதலின் துணைத் தலைவர் விஜய் பரசுராமன், "பால் மற்றும் பால் பொருள்களுக்கான பெரிய உற்பத்தியையும் சந்தையையும் இந்தியா கொண்டிருக்கிறது. இந்தப் புதிய மசாலா மோரை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் ஒவ்வொரு பிராந்தியத்திலுள்ள மோரின் சுவையை நுகர்வோருக்கு கிடைக்கச் செய்வதே" என்றார்.
உள்ளூர் பானமான மோரை கோக் நிறுவனம் அறிமுகப்படுத்தியதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜியோ நிறுவனத்தில் பிரபல அமெரிக்க நிறுவனம் 4 ஆயிரம் கோடி முதலீடு!