2009ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற ஆய்வை 11 மொழிகளில் இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் நடத்திவருகிறது.
அவ்வாறு நடத்திய ஆய்வில், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஸின் செயல்பாடுகள் 56.74 விழுக்காடு திருப்தியளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக 63.72 விழுக்காட்டினரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக்கின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக 59.71 விழுக்காட்டினரும் பதிலளித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக 61 விழுக்காட்டினர் கூறியிருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக 6.2 விழுக்காட்டினர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.