புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பெருந்தொற்று தடுப்பது குறித்து அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவையில் உள்ள அவரது அறையில் சுகாதாரத் துறை அமைச்சர், அனைத்து துறை செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியின் மாகே பகுதியில் பெண் ஒருவருக்குப் பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா அறிகுறி இருந்தது. அவர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அங்கு சில விழாக்களுக்குச் சென்றுள்ளார். அவர்களையும் சோதனைசெய்கிறோம். இதற்காக நாளை (மார்ச் 19) மாகே பகுதிக்கு நான், சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அலுவலர்கள் செல்லவுள்ளோம்.
கரோனா வைரஸ் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க மார்ச் 19 முதல் அமர்ந்து அருந்தும் மதுபான கடைகள் மூடப்படும். மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, மதுபான கடைகள் திறந்திருக்கும். இந்த அறிவிப்பு இம்மாதம் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விரைவில் வருகிறது கடற்படையில் பெண்களுக்கான ஆணையம்!