புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று சட்டப்பேரவையில் உள்ள கமிட்டி அறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "இந்த புத்தாண்டில் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு, சிறந்த மருத்துவம், சிறந்த கல்வி ஆகியவற்றை உருவாக்கி மாநிலம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லப்படும்.
பிரதமரின் ஆயுஸ்மான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அந்த திட்டத்தில் இணைய முடியாதவர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை தொடங்கி செயல்படுத்தப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அமைதியாகவும் மகிழ்ச்சிகரமாகவும் சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டை கொண்டாடினர்" என்றார்.
மேலும், புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், இதற்காக தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'ககன்யான் வீரர்களுக்கான பயிற்சி இன்னும் 3 வாரங்களில் தொடங்கப்படும்' - இஸ்ரோ சிவன்