இதுகுறித்து பேசிய அவர், “மூன்று தலைநகர் அமைக்கும் புதிய ஆணையை மக்களிடம் பெறுவதற்கு ஆளும் ஜெகன்மோகன் அரசு அச்சம்கொள்கிறது. இது தலைநகரை மாற்றுவதற்கு எதிரான மக்களின் வலுவான மனநிலையின் அறிகுறி என்றார்.
மாநில சட்டப்பேரவையைக் கலைத்து, மூன்று தலைநகரங்கள் தொடர்பான வாக்குறுதை முன்னிறுத்தி மறுதேர்தலை சந்திப்பதற்கான சவாலை தெலுங்கு தேசம் கட்சி ஏற்றுக்கொள்கிறது. ஆனால், இந்த சவாலினை ஏற்க ஜெகன் மோகனின் ஆளும் கட்சி முன்வரவில்லை.
அமராவதி தலைநகரின் அடித்தளத்திற்காக 13 ஆயிரம் கிராமங்கள் மற்றும் மூன்றாயிரம் நகராட்சி வார்டுகளைச் சேர்ந்தவர்கள் அந்தந்த இடங்களிலிருந்து புனித நீர் மற்றும் புனித மண்ணை எடுத்து வந்தனர்.
அமராவதி போராட்டத்தில் பங்கேற்றபோது 85-க்கும் மேற்பட்ட விவசாயிகள், உழவர் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் உயிரிழந்துவிட்ட நிலையில் கூட அரசாங்கம் அவர்கள் மேல் எவ்வித உணர்ச்சிகளும் இல்லாமல் செயல்பட்டுவருகிறது.
அவர்கள் பொய்யான வழக்குகளின் பெயரில் துன்புறுத்தப்பட்ட போதிலும், தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல எதிர்ப்பாளர்கள் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். காட்டுமிராண்டித் தணமான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, அமராவதியில் மூன்று தலைநகர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து நடைபெற்று வரும் 'ரணபேரி' போராட்டத்திற்கு மாநிலத்தின் 13 மாவட்டங்களிலும் உள்ள மக்கள் தங்கள் முழு ஆதரவினை நல்குவது அவசியம்” என்றார்.
இதற்கிடையில் பேசிய தெலுங்கு தேச கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.எல்.சி.நாரா லோகேஷ், “அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் ஆட்சியாளர்கள் தலைநகரத்தை மாற்றத் தொடங்கினால், அரசு எப்போதுமே வளர்ச்சியின் நம்பிக்கையில்லாமல் அழிவை சந்திக்கும்.
ஆளும் ஜெகன் மோகன் அரசு அமராவதி மக்களின் மனநிலையை உணர வேண்டும். ஆனால் அரசு கிளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது" என விமர்சித்தார்.