கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தகுந்த இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்திருத்தல், கிருமி நாசினிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை அவசியமாகின்றன. மத்திய, மாநில அரசுகள், சர்வதேச நிறுவனங்கள் ஆகியவை சாதாரண மக்கள் பயன்படுத்தும் துணி முகக்கவசங்களின் செயல் காலம் குறித்து இந்த நெருக்கடி காலக்கட்டத்தில் விவாதித்துவருகின்றனர்.
ஏனெனில் சுவாசப் பிரச்னையை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முகக்கவசங்கள் அத்தியாவசியமாகின்றன. இருப்பினும், இதனை கட்டுப்படுத்த முகக்கவசங்கள் பயனுள்ளதாக இருக்கின்றன என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்றபோதும் அவை காற்று மாசுபாட்டை குறைக்கின்றன என்பதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
துணிகளால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இயலாது. ஆனாலும், பேசுதல், தும்மல், இருமல் உள்ளிட்டவைகளின் வழியே வெளியேறும் வைரஸ்களைக் கட்டுப்படுத்தமுடியும். உண்மை என்னவென்றால், முகக்கவசங்களால் பெரும்பாலான துளிகள் நாசியின் வழியே உடலிற்குள் செல்லாமல் வெளிப்புறத்தில் நிறுத்தப்படுகின்றன. எனினும் சில துகள்கள் ஊடுருவுவதற்கும் வாய்ப்புண்டு. முகக்கவசத்தின் வெளிப்புறத்தில் தங்கியிருக்கும் துகள்கள் மீண்டும் ஏரோசெல்லாகவோ, அல்லது நீர்த்துளியாகவோ மாறாது என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக முகக்கவசங்களை அமெரிக்காவின் ஏ.எஸ்.டி.எம். (அமெரிக்கன் சொசைட்டி ஃபார் டெஸ்டிங் மெட்டீரியல்ஸ்) நிறுவனம் தர ஆய்வுக்கு உட்படுத்துகிறது. இதில் பல்வேறு நிலைகள் உள்ளன. இருப்பினும் ஒவ்வொரு நோய்க்கிருமிக்கும் ஒவ்வொரு முகக்கவசங்கள் என தனித்தனியே தேவைப்படுவதில்லை.
முகக்கவசங்களில் அடுக்குகள் (லேயர்) செயல்திறன்மிக்கவைகளாக உள்ளன. இவைகள் நீர்த்துளிகளைத் தடுக்கின்றன. ஒரு பயோஏரோசெல் சோதனையில் பல்வேறு வகையான பருத்தி துணிகளின் ஒற்றை அடுக்குகளுக்கான (single layer) செயல் திறன் 43 முதல் 94 விழுக்காடு வரை இருந்தது. மருத்துவ முகக்கவசங்களில் 98 முதல் 99 விழுக்காடு வரை இருந்தது.
அதேவகையில் ஒற்றை அடுக்கு தாவணி, டீ-சர்ட் மற்றும் துண்டுகள் உள்ளிட்டவை 10 முதல் 40 விழுக்காடு வரை வடிகட்டுதல் திறன் கொண்டவை. அதிலும் தேயிலை வடிகட்டும் ஒற்றை அடுக்கு துணியின் செயல்திறன் 83 சதவீதமாக உள்ளது. அதுவே இரட்டை அடுக்கின் திறன் மருத்துவ முகக்கவசத்துக்கு ஈடாக 97 சதவீதமாக உள்ளது. வைரஸை பயன்படுத்தும் சோதனைகளில் ஓரடுக்கு கொண்ட தேநீர் பை, 72 விழுக்காடு செயல் திறனையும், ஒரக்கு சட்டைத்துணி 51 விழுக்காட்டு செயல்திறனையும் கொண்டுள்ளது. இது மருத்துவ முகக்கவசத்துடன் ஒப்பிடும் போது பயனுள்ளதாக தெரிகின்றன. இதில் அடுக்குகள் கூடும் போது மேலும் செயல்திறன் மேம்படுகின்றன.
துணி முகக்கவசங்களின் வெளிப்புற பாதுகாப்பு குறித்து பல ஆண்டுகளாக சோதனைகள் நடந்துவருகின்றன. இதன் முடிவுகள் தற்போதுள்ள காலநிலைக்கு மிகவும் பொருந்தும் வகையிலேயே அமைகின்றன. இந்த முகக்கவசங்களால் பாக்டீரியாவை 99 சதவீதம் தடுக்க முடியும். மேலும் வான்வெளி நுண்ணுயிரிகளையும் தடுக்கும் ஆற்றல் கொண்டவையாக உள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
1975ஆம் ஆண்டு மருத்துவ முகக்கவசங்கள் மற்றும் வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட ஒரு முகக்கவசங்கள் ஆகியவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது நான்கடுக்கு பருத்தி முகக்கவசங்களின் வடிகட்டுதல் செயல்திறனுடன் அவை ஒப்பிடப்பட்டது.
விலங்குகளின் மூலம் நடைபெற்ற பரிசோதனைகளில் துணி முகக்கவசங்கள் ஏரோசோலைஸ் டூபர்கிள் பேசிலின் (காச நோயை உருவாக்கும் நுண்மி) பரவலை தடுத்துள்ளன. அடுத்து முயல்களில் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மூன்று அல்லது 6 அடுக்குகள் கொண்ட காஸ் முகக்கவசங்கள் வழியே சோதனைகள் நடைபெற்றன.
இதில் முகக்கவசம் அணிந்த விலங்குகளில் காசப் பிரச்னை 1.4 விழுக்காடாக இருந்தது. அதுவே முகக்கவசம் அணியாத விலங்குகளில் 28.5 ஆக காணப்பட்டது. இந்த வகை முகக்கவசங்கள் 95 விழுக்காடு வடிகட்டுதல் திறன்கொண்டவைகளாக உள்ளன.
சுகாதார முகாம்களில் 0.7 சதவீதம் மருத்துவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்கின்றனர். முகக்கவசம் அணிந்த சுகாதார ஊழியர்கள் மீதான இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் தாக்குதல் 2.3 சதவீதமாக உள்ளது. பொதுவாக அவர்களில் 0.2 சதவீதத்தினர் தொடர்ந்து முகக்கவசங்களை அணிந்துகொண்டே பணிபுரிகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றது.
முன்னதாக, துணி முகக்கவசங்கள் இன்ஃப்ளுயன்ஸா பாதிப்பை கட்டுப்படுத்தாது என்ற தவறான புரிதல் இருந்துவந்தது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட சூழலில் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானதா என்பதை அறிவதில் சிரமம் ஏற்பட்டது. மருத்துவ அமைப்புகளை பொருத்தமட்டில் இன்ஃப்ளுயன்ஸா நோய் பரவலை தடுக்க மருத்துவ முகக்கவசங்கள் அவசியமானது என்றும், தரமில்லாத முகக்கவசங்கள் சமூகவெளியில் விற்கப்படுவது கவலைக்குறிய ஒன்று எனவும் கூறுகின்றன.
வைரஸின் தீவிரம், வைரஸ் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சுணக்கம் ஆகியவற்றை பார்க்கும்போது வைரஸ் பரவலின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் வெளிப்புற சுத்தம், மற்றும் சுகாதாரத்தினை வைரஸ் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள பரிந்துரைப்பதாகவும் அவை கூறுகின்றன.
சுகாதாரம் உள்ளிட்ட பிற வழிமுறைகளையும் கடைப்பிடிப்பதன் வாயிலாகவும், காற்றில் பரவும் வைரஸ் நீர்குமிழிகளின் தாக்கத்திலிருந்து விடுபட ஏதேனும் ஒரு முகக்கவசங்களை பொதுமக்கள் அணிவது அவசியம் என்று சுகாதாரப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் ஒரு தனிநபர் பல்வேறு தொற்றுகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியும் என்கின்றனர்.
இதையும் படிங்க: முகக்கவசத்தில் இனி உங்களது முகம்: அசத்தும் டிஜிட்டல் ஸ்டுடியோ!