தெலங்கானா மாநிலம், சித்யால் ரயில் நிலையம் அருகே உடல் சிதைந்த நிலையில் ஆண் சிறுவனின் சடலம் ஒன்று தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே பணியாளர்கள் காவல் துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நல்கொண்டா ரயில்வே காவல் துறையினர் அப்பகுதிக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஏதேனும் சிறுவன் மாயமான வழக்குப் பதியப்பட்டுள்ளதா என விசாரித்துள்ளனர்.
இதில், யாதாத்ரி மாவட்டத்தில் உள்ள ராமனபேட்டை பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் காணாமல் போனது தெரியவந்தது.
இந்நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், எட்டாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவன், வகுப்பு பிரிதிநிதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றதாகவும், அதனை வைத்து அவ்வகுப்பு மாணவர்கள் அவரை கேலி செய்ததாகவும் அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரிகிறது.
மாணவனின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர். தற்கொலை எண்ணங்கள் தோன்றினால் இந்த 022 2754 6669 அழைக்கலாம்.