ETV Bharat / bharat

எனது முயற்சி பலிக்கவில்லை - விகாஸ் துபே மனைவி வேதனை - ரவுடியின் மனைவி

லக்னோ: குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தடுத்தும் விகாஸ் துபே தனது மன நிலையை மாற்றிக் கொள்ளவில்லை என அவரது மனைவி ரிச்சா துபே தெரிவித்துள்ளார்.

Rowdy Vikas Dubey  murder
Rowdy Vikas Dubey murder
author img

By

Published : Jul 25, 2020, 9:58 AM IST

Updated : Jul 25, 2020, 12:01 PM IST

விகாஸ் துபே தனது குற்ற பாதையை விட்டு வெளியே வர முயற்சிக்கவில்லை என்றும் தற்போது தங்களது குடும்பம் பதுங்கி, பரிதவித்து வருவதாக என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "எனது கணவர் பல கோடி ரூபாய் சொத்துக்கள் வைத்திருக்கிறார் என்று கூறுவதெல்லாம் பொய். அவர் தன்னை தற்காத்துக்கொள்ள எங்கள் வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவர் இதுவரை எங்களுக்காக எதுவும் விட்டுவைக்கவில்லை. துபாய் போன்ற பல இடங்களில் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தால் நாங்கள் ஏன் லக்னோவில் 1,600 சதுரடியில் வாழ வேண்டும். அவரை இதுபோன்ற குற்றச் செயல்களில் இருந்து மீட்க பலமுறை முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் அவரது மனநிலை சற்று வித்தியாசமாக இருந்தது.

அவர் ஒரு நல்ல கணவர், நல்ல தந்தை. குழந்தைகள் நன்றாக படித்து, பெரிய பதவிகளுக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் இது போன்ற குற்றச் செயல்களில் இருந்து வெளிவர விரும்பவில்லை. பிக்ரு கிராமத்தில் உள்ள எனது மாமியார் வீட்டில் சூழ்நிலை சரியில்லாததால், 2008ஆம் ஆண்டு லக்னோவிற்கு வந்தோம்" என்றார்.

Last Updated : Jul 25, 2020, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.