தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி பதவியை கொண்டுவரலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அரசியலமைப்பு அமர்வு முன்னிலையில் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
இந்த வழக்கில் நீதிபதிகள் மதியம் 2 மணிக்கு தீர்ப்பளிப்பார்கள் என்று தெரிகிறது. முன்னதாக வெளிப்படைத் தன்மையை கருத்தில்கொண்டு டெல்லி உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது.
நீதிபதிகளின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்று சிலர் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் கூறப்படுகிறது. ஒருமுறை இதுதொடர்பாக வழக்கு விவாதத்தின்போது நீதிபதிகள் என்ன வேற்று உலகிலா வசிக்கிறார்கள்?
வெளிப்படைத்தன்மைக்கு உச்ச நீதிமன்றம் எப்போதும் துணைநிற்கும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். எனினும் தகவலறியும் உரிமை விதிகளில் கவனம் தேவை என்று அவர்கள் கவலை தெரிவித்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு