பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்யும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பபட்டது. இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
குறிப்பாக டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில், வன்முறை வெடித்ததில் பல மாணவ மாணவியர் காயமடைந்தனர்,
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, "போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மாணவர்கள் என்பதாலேயே, அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது. நிலமை கட்டுக்குள் வந்த பிறகு இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும், இப்போதுள்ள மனநிலையில் நம்மால் எதையும் தெளிவாக முடிவு செய்ய முடியாது. முதலில் கலவரங்கள் அடங்கட்டும்" என்றார்.
மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: 'ராகுலை மன்னிப்பு கேட்கச் சொல்வது சிறுபிள்ளைத்தனம்' - திருநாவுக்கரசர்