உச்ச நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த 35 வயதான பெண் ஒருவர், கடந்த 19ஆம் தேதி, பல்வேறு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு வாக்குமூலம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் திடுக்கிடும் தகவலைக் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டானது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஏப்ரல் 20ஆம் தேதி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் உச்ச நீதிமன்ற அவசர அமர்வு கூடியது. அப்போது பேசிய கோகாய், தன் மீதான குற்றச்சாட்டு நீதிமன்ற சுதந்திரத்தைத் தடுக்கும் முயற்சி என வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த புகார் மீதான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.ஏ. பாப்டே, இந்திரா பானர்ஜி, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கொள்ளவுள்ளது.