ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் மகாராஜ் குஞ்ச் காவல் நிலையத்திற்கு அருகில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சாலையோரத்தில் வீசிய கையெறி குண்டு வெடித்ததில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், காயங்களுடன் கிடந்த மற்றொருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே, பரபரப்பான சூழலைப் பயன்படுத்திக்கொண்ட பயங்கரவாதிகள் தப்பியோடினர். இந்த தாக்குதல் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காயமடைந்தவரின் பெயர் முகமது ரபிக் ஷால்லா என தெரிய வந்துள்ளது. அப்பகுதியில் வேறெந்த அசாம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க தூதரகத்தில் மனித வெடிகுண்டு