ETV Bharat / bharat

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு

author img

By

Published : Jun 5, 2020, 6:23 PM IST

குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் நான்காம் தேதி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

புத்தகங்கள்
புத்தகங்கள்

கரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, 2020ஆம் ஆண்டிற்கான குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வருகிற அக்டோபர் நான்காம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளதாக யுபிஎஸ்சி இன்று (05-06-2020) அறிவித்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வில், முதல்நிலை, மெயின் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆளுமைத் தேர்வு, வருகிற ஜூலை 20ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான முதல்நிலை தேர்வு முன்னதாக மே 31ஆம் தேதி அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கரோனா ஊரடங்கால் தேர்வுத் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு

இதனால் இந்த வருட தேர்வுகள் ரத்து செய்யப்படுமோ என தேர்வர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். இது குறித்து, குடிமைப் பணிகள் தேர்வுக்கான புதிய தேதியை அறிவிப்பது தேர்வர்களின் அச்சத்தைப் போக்கும் என அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்னதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குடிமைப் பணிகள் தேர்வு ஆண்டுதோறும் முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 'அடித்தட்டு மக்களின் குரல் ஐநாவில் எதிரொலிக்கும்' - நெகிழ்ச்சியில் நேத்ரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.