கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிற்கான விமானப்போக்குவரத்துகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு காலம் முடிந்தபின் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்களுடன் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது.
விமான சேவை தடை செய்யப்பட்ட காலங்களில் பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்தவர்களுக்கான தொகையை திரும்ப செலுத்துவது குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ தேவை, பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து நாடு முழுவதும் விமானங்கள் இயங்க மே 3ஆம் தேதி வரை மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பார்க்க: முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட வங்கிகள்: அவதிக்குள்ளான பொது மக்கள்!