ETV Bharat / bharat

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா இன்று தாக்கல்!

டெல்லி: குடியரிமை சட்டதிருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.

Citizenship (Amendment) Bill to be tabled in RS today at 2 pm

author img

By

Published : Dec 11, 2019, 7:46 AM IST

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்பட பல எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தன. வங்கதேசத்திலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் வருகையால் பூர்வகுடி மக்களின் உரிமை பறிக்கப்படும் என கருத்து வலுத்துவந்த நிலையில், மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கட்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு 311 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 80 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

இதனிடையே, இம்மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்கிறார். பின்னர், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் அந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன்பின், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சட்டமாக்கப்படும்.

இதையும் படிங்க...அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!

Intro:Body:

Citizenship (Amendment) Bill to be tabled in RS today at 2 pm

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.