உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் மீது சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இச்சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு 20ஆம் தேதி சின்மயானந்த்தை கைது செய்தது. அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தை அணுகச்சொல்லி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் சின்மயானந்த் உடல்நலக்குறைவால் எஸ்.ஜி.பி.ஜி.ஐ.யில் (Sanjay Gandhi Post Graduate Institute of Medical Science) அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நலம் நன்றாக உள்ளது, எனினும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஷாஜகான்பூர் வழக்கில் புதிய திருப்பம்: பணம் பறிக்க முயன்ற மாணவி கைது