இந்தியப்படைகளை நோக்கி சீனப்படைகள் கடந்த சில நாட்களாக பதாகை ஒன்றை உயர்த்தி, கைலாஷ் மானசரோவர் புனிதப்பயணம் வருபவர்கள் ஓய்வெடுப்பதற்கு இந்தியப் படை வீரர்கள் உருவாக்கிய தகரக்கொட்டகைகளை அகற்ற வேண்டும் என்று அத்துமீறுவதாக தகவல்கள் வெளியாகின.
இதேபோன்று மூன்று முறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ வீரர்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்திவருகின்றனர்.
பித்தோராகரில் உள்ள லிபுலேக் சீனா எல்லையுடன் இணைத்த பின்னர் சீனா எல்லை தாண்டி இந்தியா மீது அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது. இந்தியாவுக்குள் பதற்றத்தை உருவாக்கியதன் காரணமாக இந்திய-சீன எல்லைப்பகுதியில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகப் பாதை லிபுலேக் கரோனா பெருந்தொற்றால் துண்டிக்கப்பட்டதும், கைலாஷ் மானசரோவர் புனிதப்பயணம் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “கரோனாவும் காலநிலை மாற்றமும்” - விவரிக்கும் அன்புமணி!