ETV Bharat / bharat

சீனாவின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது - வெளியுறவுத்துறை அமைச்சகம் - வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா

டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கிற்கு உரிமை கோரும் சீனாவின் கருத்து மிகைப்படுத்தப்பட்ட ஒன்று, அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகம்
வெளியுறவுத்துறை அமைச்சகம்
author img

By

Published : Jun 18, 2020, 4:07 PM IST

இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நிலவி வரும் நிலையில், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் வெடித்து தாக்குதல் நடைபெற்றதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இது, இச்சம்பவம் நாடுகளிக்கிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே, கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்கு உட்பட்ட பகுதி என அந்நாடு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், சீனாவின் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் உள்ள வீரர்களை திரும்பப் பெறுவது குறித்து, ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற ராணுவ அலுவலர்களின் உயர்மட்டக் கூட்டத்தில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக சீனா தற்போது கருத்து தெரிவித்துள்ளது.

மிகைப்படுத்தப்பட்ட இக்கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக கல்வான் விவகாரம் குறித்து ஆலோசித்துள்ளனர். இந்த விவகாரத்தை இருநாடுகளும் பொறுப்புடன் கையாளும். ஜூன் 6ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவு முறையாக செயல்படுத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க: "சைனீஸ் உணவுக்கு நோ" - மத்திய அமைச்சரின் அடடே கோரிக்கையால் மிரண்ட நெட்டிசன்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.