ETV Bharat / bharat

ராணுவ வீரர்களை விடுவித்த சீனா - ராணுவ வீரர்களை விடுவித்த சீனா

டெல்லி: இரு நாட்டு ராணுவ உயர் மட்ட அலுவலர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்திய ராணுவ வீரர்களை சீனா விடுவித்துள்ளது.

China frees ten Indian Army personnel
China frees ten Indian Army personnel
author img

By

Published : Jun 19, 2020, 3:54 PM IST

இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த ஒரு மாதமாக சீனா தனது ராணுவத்தை குவித்துவந்தது. அதற்கு பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தை குவித்ததால் எல்லையில் போர் பதற்றம் உருவானது. அதைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்களுக்கிடையே ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் இருக்கும் படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

இந்நிலையில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர், சீன ராணுவத்தால் கொல்லப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், 10 ராணுவ வீரர்களை சீனா கைது செய்தது.

அதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரு தரப்பு ராணுவ உயர் அலுவலர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில், பேச்சுவார்த்தையின் பயனாக 10 ராணுவ வீரர்களை சீனா விடுவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியா- சீனா மோதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.