ETV Bharat / bharat

'இந்தியாவை சீனா எதிரியாகக் கருதுகிறது' - பாதுகாப்பு வல்லுநர் விக்ரம்ஜித் சிங் - மூத்த பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் ஜித் சிங்

போட்டியாளராகக் கருதப்பட்ட இந்தியாவை சீனா தற்போது எதிரியாக்கியுள்ளது என மூத்த ஊடகவியலாளரும், பாதுகாப்பு வல்லுநர் விக்ரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

China
China
author img

By

Published : Jun 20, 2020, 1:45 AM IST

Updated : Jun 20, 2020, 7:33 AM IST

கடந்த ஒரு மாத காலமாக இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் சீனா தனது ராணுவத்தைக் குவித்தது. தொடர்ந்து இந்தியாவும் தனது ராணுவத்தைக் குவித்ததால் எல்லையில் போர்ப்பதற்றம் உருவானது. இதையடுத்து இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்களுக்கிடையே ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எல்லையில் இருக்கும் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது, திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இவ்விவகாரம் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாதுகாப்பு வல்லுநர் விக்ரம்ஜித் சிங் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தாக்குதல் மேற்கொண்டதன் மூலம் நாட்டின் தெற்காசிய புவிசார் அரசியல் பார்வையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதனால், போட்டியாளராகக் கருதப்பட்ட இந்தியாவைத் தற்போது சீனா எதிரியாகக் கருதுகிறது. தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்பே, இந்தியாவுடனான பொருளாதார, அரசியல் உறவு பாதிக்கப்பட்டிருந்ததை சீனா கண்டுகொண்டது.

சிறப்புப் பேட்டி

ராஜாங்க ரீதியில் சீனா தவறாகப் புரிந்துகொண்டு செயல்பட்டுள்ளது. அதனை சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவரும், அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான அதிபர் ஜி ஜின்பிங் புரிந்துகொள்ளவில்லை. முன்னதாக, நடைபெற்ற ஊடுருவல்கள் யாவும் கீழ்மட்ட அளவிலான ராணுவ அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டவை. ஆனால் இம்முறை பல தரப்பினர் தலையிட்டுள்ளனர்.

இந்தியாவின் தெற்காசிய புவிசார் அரசியல் பார்வையில் மாற்றம் நிகழ்ந்தது. இதன் விளைவாக தனது பார்வையை மறுபரிசீலனை செய்ய சீனா முற்பட்டுள்ளது. ராணுவத் திறனில் குறிப்பாக ஏவுகணையை கொண்டு தாக்குவதில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன.

நிலம், வான், கடல் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் இணைய ரீதியாகவும் சீனா தாக்குதல் மேற்கொள்கிறது. நமது ராணுவ வீரர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ராணுவத்தை கிழக்கு லடாக்கில் குவிக்க வேண்டும்.

தெற்காசியாவின் இரு பெரும் நாடுகள் தற்போது மோதல்போக்கை மேற்கொள்கின்றன. கிழக்க லடாக்கை மையமாகக் கொண்டு இது அதிர்வலைகளை ஏற்படுத்தவுள்ளது. அப்பகுதியில் சீனாவின் கையே ஓங்கியுள்ளது. 2017ஆம் ஆண்டு டோக்லாமில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு இரண்டு லட்சம் ராணுவ வீரர்களை சீனா அங்கு குவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா அமலுக்கு வந்த பிறகு, சீனாவின் தெற்காசிய ராஜாங்க ரீதியான பார்வையில் மாற்றம் நிகழ்ந்தது. நாம் சீனாவை குறைவாக மதிப்பிட்டுவிட்டோம். காஷ்மீர் விவகாரத்தில் சீனா மிகத் தெளிவாக பாகிஸ்தான் ஆதரவு போக்கைக் கையாண்டது. 1996ஆம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை நிலைநாட்டும் வகையில் இந்திய, சீனா நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

இதன் காரணமாகவே, நமது ராணுவ வீரர்கள் ஆயுதமின்றி சென்றனர். ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்னதாகவே நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 1984ஆம் ஆண்டு சியாச்சின் பனி ஆற்றை, சிறப்பாகச் செயல்பட்டு இந்தியா கைப்பற்றியது. 1994ஆம் ஆண்டு கார்கிலைத் தக்கவைத்தது. இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 'இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவவில்லை' - பிரதமர் மோடி

Last Updated : Jun 20, 2020, 7:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.