ETV Bharat / bharat

ராணுவ முகாம்களை அமைக்கும் சீனா - போருக்கு தயாராகிறதா?

author img

By

Published : Dec 8, 2020, 8:10 PM IST

டெல்லி: இந்திய-சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவ முகாம்களை அமைத்து வருகிறது.

China
China

இந்தியா - சீன பாதுகாப்புப் படையினருக்கு இடையே கடந்த மே மாதம் முதலே எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக ஜூன் மாதம் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து எல்லையில் நிலைமை மேலும் சிக்கலானது. இந்நிலையில், லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான எல்லைப் பகுதியில் போருக்குத் தயாராகும் வகையில் சீனா ராணுவ முகாம்களை அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இரு நாடுகளுக்கிடையே மோதல் நீடித்து வரும் நிலையில் கடல் மட்டத்திலிருந்து 18,000 அடி உயரத்தில் உள்ள லடாக் பகுதியில் இந்திய சீன நாடுகள் ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. எல்லைப்பகுதியில் சுமார் 20 ராணுவ முகாம்களை சீனா அமைத்துள்ளதாகவும் அதற்கு அருகே மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் ராணுவ பலத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு, டோக்லாம் பிரச்சினையின்போது பூட்டான் எல்லைப் பகுதியில் சீனா சாலைகளை அமைக்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. பூட்டானில் அமைக்கப்படும் சாலைகள் வழியாக இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் நுழைய சீனா முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு சர்வதேச அரங்கில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.