புதுச்சேரி தவளக்குப்பத்தில் நடைபெற்ற உள் விளையாட்டு அரங்கம் பூமி பூஜை விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். பின்னர் விழா முடிந்து அவ்வழியாக சென்றபோது, தானம் பாளையம் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டமாக இருந்ததைப் பார்த்த முதலமைச்சர் காரை விட்டு இறங்கி, பொது மக்களிடம் ஏன் கூட்டமாக நிற்கிறீர்கள் என கேட்டார்.
மின்சார கட்டணம் கட்டுவதற்காக நிற்பதாக பொது மக்கள் தெரிவித்தனர். இதனைக் கேட்ட முதலமைச்சர் நாராயணசாமி, உடனடியாக தனது கைப்பேசி மூலமாக மின் துறை தலைமைப் பொறியாளரைத் தொடர்பு கொண்டு கரோனா நோய்த் தொற்று காலத்தில் மக்கள் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்குமாறு விரைவாக பணிகளை செய்யுமாறும் உத்தரவிட்டார்.
மேலும், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து மின்கட்டணம் செலுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார். இவ்விவகாரம் தொடர்பாக அரசு அலுவலருடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ராமர் கோயில் பூமி பூஜை நாள் - ட்விட்டரில் ராவணனை உச்சிமுகர்ந்த தமிழர்கள்!