புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சார்பில் 23ஆவது புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
பத்து நாள்கள் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 60-க்கும் மேற்பட்ட புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
கண்காட்சியில் உலகப் புகழ்பெற்ற புத்தகங்கள், தலை சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், கல்வி சார்ந்த மென்பொருள் குறுந்தகடுகள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ப தனித்தனியான புத்தக வகைகள் உள்ளன.
கண்காட்சியின் சிறப்புகளாக கணிப்பொறி வழி கற்றல், கல்வி சார்ந்த மென்பொருள் தகடுகள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி போன்ற நூல்கள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: நூலக வாரவிழா: மாணவர்களுக்கு கவிதை, கட்டுரைப் போட்டி!