ETV Bharat / bharat

புதுச்சேரி மக்களுக்கு அரிசிதான் வேண்டும்: முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் தீர்மானம் குறித்து நாளை துணைநிலை ஆளுநரை சந்திக்கவுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

chief minister narayanasamy spokes about puducherry budget
author img

By

Published : Sep 7, 2019, 11:57 AM IST

புதுச்சேரி நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. இத்தொடரில், கடந்த 28ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் முடிவுற்று முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் துறை அமைச்சர்களின் ஒப்புதலுடன் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியிலுள்ள அனைத்து பிராந்திய மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தி நிதிநிலை அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது என்றார். குறிப்பாக விவசாயத் துறை, கால்நடைத் துறை, சமூகநலத் துறை, குடிமைப்பொருள் துறை, மின் துறை, கலால் துறை ஆகிய துறைகளுக்கு ஒதுக்கிய நிதிகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

புதுச்சேரி மக்களுக்கு அரிசிதான் வேண்டும்: முதலமைச்சர் நாராயணசாமி

சட்டப் பல்கலைகழகத்திற்கான சட்ட வரைவு ஏற்படுத்தப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த நிதிநிலை அறிக்கை அனைத்துத் தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டுள்ளது என்றார். குறிப்பாக விபத்தில் அடிபட்டு கிடப்பவர்களுக்கும் உதவி செய்பவர்களுக்கும் ஐந்தாயிரம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசிதான் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார். அதற்கு உரிய தொகையை அளித்தால் சரியான முறையில் அந்தப்பணம் பயன்படுமா என்பது சந்தேகமே எனக் குறிப்பிட்ட நாராயணசாமி, இந்தத் தீர்மானம் குறித்து நாளை மதியம் ஒரு மணியளவில் துணைநிலை ஆளுநரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Intro:
புதுச்சேரியில் அனைவரும் வரவேற்கும் வகையில் பட்ஜெட் இயற்றப்பட்டுள்ளது... பல்வேறு புதிய அறிவிப்புகள் வரவேற்கப்பட்டுள்ளது ... அணைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டுள்ளது, நாளை இலவச அரிசி குறித்தான தீர்மானம் குறித்து துணை நிலை ஆளுநரை நாளை 1 மணிக்கு சந்திப்போம் என்று பட்ஜெட் நிறைவேற்றத்திற்கு பின்பு முதலமைச்சர் நாராயணாமி பேட்டி ...
Body:புதுச்சேரி

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 26 ம் தேதி தொடக்கி நேற்று வரை நடைபெற்றது. கடந்த28 ம் தேதி நிதி அமைச்சரும் , முதலமைச்சருமான நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். கடந்த 1 ம் தேதி முதல் பட்ஜெட் மீதன விவாதம் நடைபெற்றது. இன்று சட்டப்பேரவை யில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் முடிவுற்று முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களின் பதில் அளித்த பின் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது குறிப்பாக விவசாய துறை , கால்நடை துறை , சமூக நலத்துறை, குடிமை பொருள் துறை , மின்துறை , கலால்துறை ஆகிய துறைகளுக்கு ஒதுக்கிய நிதிகளை நடைமுறைப்படுத்துவோம், சட்ட பல்கலை கழகத்திற்கான சட்ட வரைவு ஏற்ப்படுத்தப்பட்டு அமைக்காரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் இந்த பட்ஜெட் அணைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டுள்ளது. குறிப்பாக விபத்தில் அடிபட்டு கிடப்பரவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு 5 ஆயிரம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தது அணைத்து தரப்பையும் வரவேற்று உள்ளது. புதுச்சேரியின் ஒட்டுமொத்த 4 பிராந்தியங்களுக்கும் வளர்ச்சி ஏற்படும் வகையில் பட்ஜெட் அறிவித்திருக்கின்றோம் , இதனால் புதுச்சேரி ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறிய முதலமைச்சார் நாளை மதியம் 1 மணிக்கு துணை நிலை ஆளுநரை சந்திப்போம் என்று தெரிவித்த அவர் சிதம்பரம் கைது குறித்து ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தேன் ஊகத்தின் அடைப்படையில் அவரது மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கர்நாடக முன்னாள் அமைச்சர் மீது தேவையில்லாம வழக்கு போடப்பட்டுள்ளது. இது தேவையில்லாதது.இது பழிவாங்கும் நடவடிக்கை. இதற்க்கு காலம் பதில் சொல்லும் என்றும் தெரிவித்தார்.

பேட்டி- நாராயணசாமி - முதலமைச்சர்Conclusion:
புதுச்சேரியில் அனைவரும் வரவேற்கும் வகையில் பட்ஜெட் இயற்றப்பட்டுள்ளது... பல்வேறு புதிய அறிவிப்புகள் வரவேற்கப்பட்டுள்ளது ... அணைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டுள்ளது, நாளை இலவச அரிசி குறித்தான தீர்மானம் குறித்து துணை நிலை ஆளுநரை நாளை 1 மணிக்கு சந்திப்போம் என்று பட்ஜெட் நிறைவேற்றத்திற்கு பின்பு முதலமைச்சர் நாராயணாமி பேட்டி ...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.