ETV Bharat / bharat

ப. சிதம்பரத்தின் ஜாமீன் வழக்கு: அக்.15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்
author img

By

Published : Oct 4, 2019, 1:21 PM IST

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர். பானுமதி மற்றும் ரிஷ்கேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அக்டோபர் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறி ஒத்தி வைத்தனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ப. சிதம்பரத்தை சிபிஐ காவல்துறையினர் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவரது நீதிமன்றக் காவலை வருகின்ற 17ஆம் தேதி வரை நீடித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார். ஆனால் இந்த மனு 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஐஎன்எகஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முதலீடு அனுமதியளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளன.

Intro:Body:

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் | #PChidambaram #SupremeCourt

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.