ETV Bharat / bharat

ரூ. 10 லட்சம் லஞ்சம் பெற்ற சிதம்பரம் - சிபிஐ - சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ரூ. 10 லட்சத்தை சிதம்பரம் லஞ்சமாக பெற்றுகொண்டுதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chidambaram
author img

By

Published : Oct 18, 2019, 8:26 PM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரையும் சிபிஐ சேர்த்தது.

இந்த வழக்கில் முன்பிணை கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செப்டம்பர் 5ஆம் தேதி அவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிதம்பரம், பீட்டர் முகர்ஜி, சிந்து ஸ்ரீ குல்லர், ரவிந்திர பிரசாத் உள்ளிட்ட 15 பேரை சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது.

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 9.96 லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்றுக்கொண்டு சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு அனுமதி அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Intro:Body:

Chidambarams Among 15 Charged In INX Case, Accused Of Taking Rs. 10 Lakh

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.