ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து - ஆதரவு கொடுக்கும் சிதம்பரம்

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க கோரி அம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Chidambaram
Chidambaram
author img

By

Published : Aug 23, 2020, 7:50 PM IST

அரசியலமைப்பு சட்டம் 370 மூலம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுவந்தது. இதையடுத்து, மத்திய அரசு சட்டத்தை நீக்கி மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்நிலையில், நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க கோரி அம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்டவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக போராட்ட களத்தில் குதித்துள்ள அரசியல் கட்சிகளுக்கு தலைவணங்குகிறேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோரிக்கை நிறைவேறும் வரை எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தேசியவாதிகள் என சொல்லிக் கொள்பவர்களின் விமர்சனத்தை நிராகரியுங்கள். வரலாறு தெரியாத அவர்கள் வரலாற்றை மாற்றியமைக்க விரும்புகிறார்கள்.

அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக போராட்ட களத்தில் குதித்துள்ள ஆறு அரசியல் கட்சிகளின் துணிவையும் ஒற்றுமைக்கும் தலைவணங்குகிறேன்" என பதிவிட்டுள்ளார். அதிகார பரவலை நிலைநாட்டும் வகையில் அரசியலமைப்பில் சிறப்பு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து உருவாக்கலுக்கு எதிராக உள்ள அரசால் நாகா பிரச்னையை எப்படி தீர்க்க முடியும் என சிதம்பரம் கேள்வு எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: திட்டமிட்டபடி பிகார் தேர்தல் நடக்கும்- தேர்தல் ஆணையம் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.