ETV Bharat / bharat

தேசிய குடியுரிமை பதிவேடு பற்றி ப.சிதம்பரம் சரமாரி கேள்வி - Chidambaram on NRC

இந்திய குடிமக்கள் இல்லை என அறிவிக்கப்பட்ட 19 லட்சம் மக்கள் இந்தியாவில் ஒவ்வொரு நொடியும் பயத்துடன்தான் வாழவேண்டுமா என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

chidambaram
author img

By

Published : Oct 7, 2019, 10:31 PM IST

நாட்டின் வடகிழக்கிலுள்ள மாநிலங்களில் குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் புலம்பெயர்ந்து வந்தவர்கள் குறித்த பட்டியலான தேசிய குடியுரிமை பதிவேடு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 19 லட்சம் மக்கள் இந்தியர்களே இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "தேதிய குடியுரிமை பதிவேடு ஒரு சட்ட செயல்முறை என்றால், இந்தியர்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்ட 19 லட்சம் மக்களை இந்த பதிவேடு எப்படிக் கையாளும்"

  • If Bangladesh has been assured that the NRC process will not affect Bangladesh, how will the Indian state deal with the 19 lakh persons?

    — P. Chidambaram (@PChidambaram_IN) October 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"வங்கதேசம் தேசிய குடியுரிமை பதிவேட்டால் பாதிக்கப்படாது என்று உறுதியளித்திருக்கும் நிலையில், 19 லட்சம் மக்களை இந்தியா என்ன செய்யப்போகிறது. இந்த 19 லட்சம் நபர்களும் நிச்சயமற்ற பதட்டத்துடனும், குடியுரிமையும் மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையிலேயே எவ்வளவு காலம்தான் வாழவேண்டும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"மகாத்மா காந்தியடிகளின் மனித நேயத்தைக் கொண்டாடும் இந்த சூழலில், இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்" என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

  • As we celebrate Mahatma Gandhi's humanism, we are obliged to answer these questions.

ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் உள்ளதால் அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரது குடும்பத்தார் இந்த ட்வீட்டை செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: பசுமை பட்டாசுகளுக்கும் நோ சொன்ன பிரகாஷ் ஜவடேகர்

Intro:Body:

PC tweet on NRC

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.