சீனாவின் வூஹான் நகரில் தொற்றிய கோவிட்-19 வைரஸ் என்ற கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதில் சீனாவில் மட்டும் இந்த வைரஸால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கோவிட்-19 வைரஸ் சீனா தவிர தென் கொரியா, ஈரான், இத்தாலி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் வேகமாகப் பரவிவருகிறது. இது உலக நாடுகள் இடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து கொரோனா வைரஸ் கோழியின் மூலமாகப் பரவுகிறது என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவிவருகிறது. இதனால் இந்தியாவில் கறிக்கோழியின் விலை, விற்பனை சரிந்துள்ளது.
இது குறித்து கோத்ரேஜ் வேளாண் கால்நடை அலுவலர் கூறுகையில், இந்தியாவில் உள்ள கோழிகளின் மூலம் கோரோனா வைரஸ் பரவவில்லை. இவை வதந்திகளே. இதுபோன்ற வதந்தியால் கோழியின் விலை 70 சதவிகிதமும், விற்பனை 50 சதவிகிதமும் குறைந்துள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...நீட் முறைகேடு: சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சம்மன்