சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கரோனா வைரஸ் என்னும் தொற்று நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சீனாவில் இந்த வைரஸின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கொடிய வைரஸ் சிக்கன் உள்ளிட்ட இறைச்சிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுமா என்ற கேள்விக்குக் கடிதம் மூலம் பதிலளித்துள்ள கால்நடைத் துறை ஆணையர் பரவீன் மாலிக், "2019 n-CoV (புதிய கரோனா வைரஸ்) மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒன்று. உலக கால்நடை சுகாதார அமைப்பின் படி இது விலங்குகளிலிருந்து பரவக்கூடியது இல்லை. தொடங்கவில்லை. ஆனால், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிக்கன் போன்ற இறைச்சிகளால் இதுவரை எந்த நபரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை. எனவே சிக்கனை உட்கொள்வது பாதுகாப்பானதே. உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி, சுத்தமாக இருப்பது நல்லது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கரோனா வைரஸிற்கு புதிய செயலி அறிமுகம்!