சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகிக்கு புதன்கிழமை இரவு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதய துடிப்பு மோசமடைந்து வருவதால் அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் ஒன்பது மாதங்களுக்கு முன்பு கோமாவில் வீழ்ந்தார்.
முன்னதாக, மே 9ஆம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுவாசிக்க சிரமப்பட்டு வந்த ஜோகியை அவரது உறவினர்கள் ஸ்ரீ நாராயண மருத்துவமனையில் சேர்த்தனர், வென்டிலேட்டர் உதவியோடு அவர் சுவாசித்துவந்தார்.
மார்வாஹி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ஜோகி, 2000ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜனதா காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஜனதா காங்கிரஸ் ஐந்து தொகுதிகளை மட்டுமே வென்றது.
இதையும் படிங்க: கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, மக்கள் துயர் துடைக்கும் நேரம் - ராஜஸ்தான் துணை முதலமைச்சர்