சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர்ட் மாவட்டத்தில் உள்ள பத்ராலப்லி எனும் கிராமத்தில் ஜிந்தா ஸ்டீல் ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதி மாலை இந்த ஆலையின் டீசல் சேமிப்புக் கிடங்கு வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
இது குறித்து ராய்கர்ட் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங், ”ஆலையில் உள்ள குப்பைக் கிடங்கில், கேஸ் கட்டர் மூலம் நான்கு ஊழியர்கள் பழைய டீசல் சேமிக்கும் இடத்தை அறுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தீப்பற்றி, டீசல் சேமிக்கும் இடம் வெடித்து, இந்தத் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் நான்கு தொழிலாளர்களுக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. கன்ஹையலால் (59), ஜெய்ராம் ஹால்கோ (35) என்ற இரண்டு தொழிலாளர்கள் கவலைக்கிடமான நிலையில் ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு (ஜூன் 11) இருவரும் உயிரிழந்தனர்” என்றார். இந்த விபத்து குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: 'புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் விபத்து எனப் பரவிய செய்தி வதந்தி'